Latestமலேசியா

ஜோர்ஜ் டவுனில் RM6.3 மில்லியன் வெள்ளத் தடுப்புத் திட்டம்: துணை அமைச்சர் நேரில் ஆய்வு

ஜோர்ஜ்டவுன், ஜூன்-15-பினாங்கு, ஜோர்ஜ் டவுன் நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் திடீர் வெள்ளப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், மத்திய அரசு மேற்கொண்டு வரும் முக்கியத் திட்டத்தின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பினாங்கு, வடகிழக்கு மாவட்டத்தின் S18 வெள்ளத் தடுப்பு நீர் தேக்கக்குளம் மற்றும் நீர் இறைக்கும் பம்புகளை மேம்படுத்தும் திட்டத்தை, எரிசக்தி, மாற்று மற்றும் நீர் உருமாற்ற அமைச்சின் (PETRA) துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் ஹாஜி முகமட் நேரில் சென்று பார்வையிட்டார்.

சுமார் 6.3 மில்லியன் ரிங்கிட் செலவிலான இத்திட்டம், வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்குளத்தின் பழைய கட்டமைப்பை மாற்றி, 3 புதிய நீர் இறைக்கும் பம்புகள், மின்சார விநியோகக் கட்டமைப்பு மற்றும் குளத்தின் கொள்ளளவை அதிகரிக்கும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பருவமழை மாற்றங்களால் ஏற்படும் அதிகப்படியான மழையினால் நகருக்குள் திடீர் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டம் முழுமை பெறுவதன் மூலம் அப்பகுதியைச் சுற்றியுள்ள 39,550-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!