
ஹதராபாத், ஜூலை-19-இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட Skyroot Aerospace நிறுவனம், ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து தனது ‘விக்ரம்-1’ ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
Mission Aagaman எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், ஓர் இந்திய தனியார் நிறுவனம் விண்ணில் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவிய முதல் நிகழ்வாகும்.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த 22 மீட்டர் நீள ராக்கெட்டில், _carbon composite_ தொழில்நுட்பம் மற்றும் 3D அச்சு மூலம் உருவாக்கப்பட்ட திரவ இயந்திரம் போன்ற நவீன அம்சங்கள் உள்ளன.
வழக்கமான சோதனை முயற்சிகளைப் போல் அல்லாமல், இந்தத் திட்டத்தில் உண்மையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் துணைக்கோளங்கள் சுமந்து செல்லப்பட்டு, அதன் தரம் மற்றும் செயல்பாடு வெற்றிகரமாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டு இந்திய விண்வெளித் துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்களின் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட விண்வெளி _start-up_ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
விண்வெளிப் பொருளாதாரம் தற்போது 9 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அடுத்த பத்தாண்டுகளில் இதை 44 பில்லியன் டாலராக உயர்த்த இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த வெற்றி, வணிக ரீதியான துணைக்கோள ஏவுதல் மற்றும் அனைத்துலக விண்வெளி ஒத்துழைப்பில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றும் முயற்சியில் ஒரு முக்கியப் படியாகக் கருதப்படுகிறது.



