Latestமலேசியா

ஈப்போ தஞ்சோங் பியாண்டாங்கில் டால்பின் சடலம்? – பேராக் மீன்வளத் துறை விசாரணை

ஈப்போ, ஆகஸ்ட் 7 – பேராக் தஞ்சோங் பியாண்டாங்கின் பான் பெச்சா (Ban Pecah, Tanjung Piandang) பகுதியில் இராவடி (Irrawaddy) டால்பின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, பேராக் மீன்வளத் துறை விசாரணை தொடங்கியுள்ளது.

அதிகாரப்பூfர்வ புகார் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில், சம்பவம் உண்மையா அல்லது காணொளி பழையதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சடலம் கண்டுபிடிக்கப்பட்டால், அதன் இறப்புக்கான காரணத்தை அறிய உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

காணொளியின் அடிப்படையில், டால்பின் சுமார் 2 மீட்டர் நீளமும், 7 முதல் 9 ஆண்டுகள் வயதுமுடைய இராவடி இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!