Latestமலேசியா

நெகிரி செம்பிலானின் புதிய பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்ப

சிரம்பான், ஆகஸ்ட்- 07-நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அச்சடங்கு Istana Besar Seri Menanti அரண்மனையில் நடைபெற்றது. பதவி நியமனக் கடிதங்களை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் Yang Dipertuan Besar , Tuanku Muhriz Tuanku Munawir எடுத்து வழங்கினார்.

அந்நிகழ்வில் அண்மையில் புதிய மந்திரி பெசாராகப் பதவியேற்ற Datuk Ismail Lasim-மும் கலந்து கொண்டார்.

புதிய ஆட்சிக் குழுவில் Barisan Nasional சார்பில் 8 பேரும், Perikatan Nasional சார்பில் 2 பேரும் இடம் பெற்றுள்ளனர். Palong, Linggi, Chembong, Sungai Lui, Lenggeng, Labu, Gemencheh மற்றும் Chennah தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் முறையே Mustapha Nagoor, Faizal Ramli, Zaiful Bahri Idris, Razi Ali, Asna Amin, Siti Nur Umaira Hasim, Suhaimizan Bizar, Siow Kong Choon ஆகியோர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

PNனைப் பிரதிநிதித்து Serting சட்டமன்ற உறுப்பினர் Fairuz Isa மற்றும் Sikamat தொகுதி சட்டமன்ற உறுப்பினர் Razali Abu Samah ஆகியோர் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் மொத்தம் 36 தொகுதிகளில் BN-PN கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெற்று புதிய மாநில அரசை அமைத்துள்ளது. Pakatan Harapan 11 இடங்களில் வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!