
ஷா ஆலாம், ஆகஸ்ட்-8-3R எனப்படும் மதம், இனம் மற்றும் ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனை விவகாரங்களைப் பேசியதாக, போட்காஸ்ட் நடத்திய இருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
மதச்சார்பின்மை மற்றும் தாராளமயக் கோட்பாடுகள் குறித்து அவர்கள் பேசிய வீடியோ முன்னதாக வைரலானது.
இதையடுத்து பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், அந்த போட்காஸ்ட் நிகழ்ச்சி நெறியாளரான 30 வயது ஆடவரும், 60 வயது வர்த்தகரும் நேற்று முன்தினம் கைதாகினர்.
குற்றவியல் சட்டம், தொடர்பு மற்று பல்லூடகச் சட்டம், தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வேளையில், சமூக நல்லிணக்கத்திற்கும் பொது அமைதிக்கும் அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலான கருத்துகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு, அனைத்துப் படைப்பாளிகளுக்கும் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



