Latestமலேசியா

மனைவியை இழந்த மகாதீரின் துயரத்திலும் AI விளையாட்டா? MCMC எச்சரிக்கை

சைபர்ஜெயா, அக்-2 — மனைவியை இழந்து துயரத்தில் இருக்கும் துன் டாக்டர் மகாதீரின் காணொளிகளை AI மூலம் திரித்து, சமூக ஊடகங்களில் பரப்பும் செயலை MCMC கடுமையாகச் சாடியுள்ளது.

ஒருவரின் இழப்பும் வேதனையும் தொழில்நுட்பத்தால் திரித்து பயன்படுத்தப்படக்கூடாது. அத்தகைய செயல் அவரது கண்ணியத்தையும் குடும்பத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் என மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம் வலியுறுத்தியது.

தமது துணைவியார் துன் டாக்டர் சித்தி ஹஸ்மாவின் மறைவால் மகாதீர் துயரத்தில் இருந்தபோது பதிவான காணொளிகளை, சிலர் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றியமைத்துப் பரப்புவது குறித்து ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உண்மையான பதிவுகளை இவ்வாறு திரிப்பது பொதுமக்களைக் குழப்புவதுடன், நடந்த சம்பவத்தின் உண்மைப் பின்னணியையும் மாற்றிவிடும் என அது தெரிவித்தது.

சம்பந்தப்பட்ட சமூக ஊடகத் தளங்களைத் தொடர்புகொண்டுள்ள MCMC, அந்தப் பதிவுகளை ஆராய்ந்து வருகிறது. சட்டமீறல் உறுதியானால், நடைமுறையிலுள்ள சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய பதிவுகளை உருவாக்கவோ பகிரவோ வேண்டாம் எனக் கேட்டுக்கொண்ட ஆணையம், பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்குமாறும் அறிவுறுத்தியது.

AI பல நன்மைகளைத் தரலாம். ஆனால், ஒருவரின் துயரத்தைப் பயன்படுத்தி அவரது கண்ணியத்தையும் மனிதநேயத்தையும் சிதைக்கும் கருவியாக அது மாறக்கூடாது என MCMC வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!