Latestமலேசியா

13,000 தாமதமான பிறப்புப் பதிவுகளுக்கு இவ்வாண்டு தீர்வு: உள்துறை அமைச்சர் தகவல்

கூலாய், அக்டோபர்-24,இவ்வாண்டு மட்டும் இதுவரை சுமார் 13,000 தாமதமான பிறப்புப் பதிவுகள் தேசியப் பதிவிலாகா JPN-னால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

ஜோகூர், கூலாயில் நடைபெற்ற Kampung Angkat Madani நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளைப் பள்ளியில் பதிவதிலும் மருத்துவச் சிகிச்சைகளைப் பெறுவதிலும் பல குடும்பங்கள் இன்னும் சிரமங்களைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அடையாளப் பத்திரங்களை வழங்கி, அரசாங்கச் சேவைகளை அவர்கள் தடையின்றிப் பெறுவதை உறுதிச் செய்ய JPN தொடர்ந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.

அடையாள ஆவணங்கள் வழங்குவது மட்டுமின்றி பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புப் பதிவுகளையும் துல்லியமாக கையாள்வதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதாக சைஃபுடின் சொன்னார்.

இவ்வேளையில், இந்த மடானி கிராமத் தத்தெடுப்புத் திட்டத்தின் கீழ் Kampung Melayu Sedenak கிராமத்திற்கு 500,000 ரிங்கிட் மானியமும், சிறப்புப் பள்ளிக்கு 100,000 ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!