
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-22-பினாங்கு, ஆயர் ஈத்தாம், கம்போங் பீசாங் சாலையில் நிகழ்ந்த விபத்தில், 6 வயது சிறுவனின் கால் மோட்டார் சைக்கிள் சங்கிலிப் பகுதியில் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 7.30 மணி வாக்கில் ஓர் ஆடவர் ஓட்டிச் சென்ற Yamaha LC 135 மோட்டார் சைக்கிள் சாலையோரம் தடம்புரண்டு விழுந்தது.
அதில், மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சிறுவனின் இடது கால் sprocket பகுதியில் சிக்கியது.
உடனடியாக பாயா தெரூபோங் தீயணைப்பு நிலையத்திலிருந்து 8 வீரர்கள் சம்பவ இடம் விரைந்தனர்.
ஒருவழியாக சிறப்பு கருவி மூலம் சிறுவனது கால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக APM குழுவினரால் அவன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான்.
மோட்டார் சைக்கிளை ஓட்டிய 30 வயது ஆடவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.
சிறுவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் செல்லும் போது கூடுதல் கவனம் அவசியம் என தீயணைப்புத் துறை ஆலோசனைக் கூறியது.



