Latestமலேசியா

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதியில் போலீஸ் அதிரடி சோதனை; பலர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர்-28,ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சிறப்பு மையமாகச் செயல்பட்டு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கேளிக்கை விடுதி ஒன்றின் மீது, புக்கிட் அமான் குற்றத் தடுப்புப் பிரிவு (D7) அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

​நள்ளிரவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, அங்கிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் அடையாள ஆவணங்கள், வணிக உரிமங்கள் மற்றும் சிறுநீர் போதைப்பொருள் பரிசோதனைகள் விரிவாக நடத்தப்பட்டன.

​விடுதியின் மேலாளர், முறையான ஆவணங்களின்றிப் பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உறுதிச் செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உட்பட பலர் மேல் நடவடிக்கைக்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.

​மேலும், அங்குப் பயன்படுத்தப்பட்ட இசை உபகரணங்கள் மற்றும் வணிகப் பதிவேடுகளையும் பறிமுதல் செய்துள்ள போலீஸார், சட்டவிரோதக் கேளிக்கை விடுதிகள் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!