Latestமலேசியா

WhatsApp கணக்குகள் தவறாக முடக்கம்; தொழில்நுட்பக் கோளாறை ஒப்புக்கொண்ட Meta

புத்ராஜெயா, அக்டோபர்-3,WhatsApp பயனர்களின் சில கணக்குகள் தவறுதலாக முடக்கப்பட்டதற்கு, தனது கணினி முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே காரணம் என Meta நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யிடம் Meta இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

MCMC முதற்கட்டமாக Meta-விடம் சமர்ப்பித்த புகார்களில், பாதிக்கும் மேற்பட்ட சம்பவங்கள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான பயனர்களின் நடவடிக்கைகள், WhatsApp விதிமுறைகளை மீறியதாக கணினி முறை தவறாக அடையாளம் கண்டதே இதற்குக் காரணம் என Meta தெளிவுப்படுத்தியது.

என்றாலும் இந்தத் தொழில்நுட்பப் பிரச்சனை கடந்த செப்டம்பர் இறுதியில் சரிசெய்யப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட முறையான கணக்குகளும் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேல்முறையீடு செய்யாத சில பயனர்களின் கணக்குகளும் Meta-வால் மீட்டெடுக்கப்பட்டதாக MCMC தெரிவித்துள்ளது.

எனவே, இது தொழில்நுட்பக் கோளாறே தவிர WhatsApp-ன் அமுலாக்கக் கொள்கை அல்லது சேவை விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் Meta உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பயனர்களிடமிருந்து 92 புகார்கள் பதிவாகியிருந்ததாக MCMC முன்னதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!