
கோலாலம்பூர், மே-6-தேசிய பதிவிலாகாவான JPN, தற்போது குழந்தைகளின் பெயர் பதிவில் ‘Mohd’ என்ற சுருக்கத்தைப் பயன்படுத்த அனுமதிப்பதில்லை.
அதற்குப் பதிலாக Mohamad, Muhamad அல்லது Muhammad என முழுமையாக எழுதப்பட வேண்டும் என அது கட்டாயமாக்கியுள்ளது.
புதிய தலைமுறையினரின் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கவும், பெயர்களைத் தரப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக JPN விளக்கியது.
இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாகத் தங்கள் அடையாள அட்டையில் ‘Mohd’ என்று பெயர் கொண்டவர்கள் இதற்குப் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பெயர் முழுமையாக இருப்பது சிறந்தது எனச் சிலர் ஆதரித்தாலும், இந்தச் சுருக்கம் ஜாவி எழுத்துமுறையிலிருந்து உருவானது எனச் சிலர் விளக்குகின்றனர்.
இருப்பினும், ஒரு தரப்பினர் ‘Mohd’ என்பது மலேசியாவுக்கே உரிய தனித்துவமான அடையாளம் என்று கருதுகின்றனர்.



