
கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-8-AI அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உலகிலேயே முதன்முறையாக இயற்கையில் இல்லாத புதிய வைரஸ்களை அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகம் மற்றும் Johns Hopkins பல்கலைக்கழக நிபுணர்கள், Evo 2 என்ற AI மாதிரியைப் பயன்படுத்தி புதிய மரபணுக்களை உருவாக்கினர்.
ஆய்வுக் கூடத்தில் சோதிக்கப்பட்டவற்றில் 16 வைரஸ்கள் வெற்றிகரமாக E. coli பாக்டீரியா கிருமிகளை அழித்துப் பெருக்கம் அடையும் திறன் கொண்டவையாக மாறின.
இந்த வைரஸ்கள் பாக்டீரியாக்களை மட்டுமே தாக்கும் திறன் கொண்டவை என்றும், மனிதர்களைப் பாதிக்கும் தகவல்கள் AI-க்கு வழங்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தினர்.
மருத்துவத் துறையில் பாக்டீரியா எதிர்ப்பு நோய்களுக்குத் தீர்வுகாண இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்றாலும், AI மூலம் எதிர்காலத்தில் ஆபத்தான நோய்க்கிருமிகள் உருவாக்கப்படக்கூடும் என்ற அச்சமும் உயிரியல் பாதுகாப்பு நிபுணர்களிடையே எழுந்துள்ளது.



