Latestமலேசியா

பதின்மவயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையில்லாத நபர் மீது குற்றச்சாட்டு

மலாக்காவில் 17 வயதுடைய சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக வேலையற்ற நபர் ஒருவர் மீது Ayer Keroh செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அக்குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. 38 வயதான Mohd Asroy Razali எனும் அந்நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

வழக்கறிஞர் எவரும் இல்லாத அந்நபர் தமக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு 18,000 ரிங்கிட் பிணையை நிர்ணயிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதோடு அவர் அரசுத் தரப்பு சாட்சிகளிடம் தலையிடக்கூடாது, ஒவ்வொரு மாதமும் அருகிலுள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

தனது தாயாரையும், இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தந்தையையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறி அந்நபர் நிபந்தனைகளைத் தளர்த்துமாறு கேட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கப்படாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வழக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி மறுவிசாரணைக்கு வருகிறது.

அந்நபர் ஆகஸ்ட் 1-ஆம் தேதி காலை சுமார் 8.00 மணியளவில், Melaka Tengahவில் உள்ள Kampung Bandar Hilir, Jalan Parameswaraவில் ஒரு ஹோட்டலில், அக்குற்றத்தைப் புரிந்துள்ளார். அவரை ஏற்கனவே அறிந்திருந்த பாதிக்கப்பட்ட 17 வயது இளம் பெண் அது குறித்து முன்னதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!