Latestமலேசியா

மக்களின் கருத்துகளைக் கேட்க AI அவதாரத்தை அறிமுகப்படுத்திய பிரதமர் அன்வார்

புத்ராஜெயா, ஜூலை-19-பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பொது மக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்காக, AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தனது அவதாரத்தை (Avatar) அறிமுகப்படுத்தியுள்ளார்.

​சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட இந்த ‘Digital Twin’ மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களின் கருத்துக்கள், கவலைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாகப் பிரதமரிடம் தெரிவிக்கலாம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

​நாட்டின் வளர்ச்சி மக்களின் விருப்பத்திற்கேற்ப அமைய வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், ‘மலேசியா மடானி’யைக் கட்டமைக்க இந்த புதியத் தளத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

​இந்த அவதாரத்தைத் தொடர்பு கொள்ள விரும்புவோர், 03-7885 0523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!