Latestமலேசியா

பெர்சாத்துவில் தொடரும் களையெடுப்பு: 2 சட்டமன்ற உறுப்பினர்கள் நீக்கம்; 3 எம்.பி.க்கள் உட்பட நால்வர் இடைநீக்கம்

கோலாலம்பூர், மே-9-பெர்சாத்து கட்சியில் தொடரும் அதிரடி மாற்றமாக, 2 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 4 மூத்த தலைவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

​கட்சி கட்டொழுங்கு வாரியத் தலைவர் டத்தோ முஹமட் ராட்ஸி மனான் வெளியிட்ட அறிவிப்பின்படி, கட்சி அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளை மீறியதற்காக Suka Menanti சட்டமன்ற உறுப்பினர் Dzowhari Ab Ghani மற்றும் Sungai Tiang சட்டமன்ற உறுப்பினர் Abdul Razak Khamis கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

​நடவடிக்கைகள் அதோடு நின்றுவிடவில்லை.

தானா மேரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ Ikmal Hisham Abdul Aziz, ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Khalib Abdullah, லூமுட் நாடாளுமன்ற உறுப்பினர் Nordin Ahmad Ismail மற்றும் Chenderoh சட்டமன்ற உறுப்பினர் Syed Lukman Hakim Syed Mohd Zain ஆகியோர் இரண்டு தேர்தல் தவணைகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதுடன், கட்சி சார்பில் கருத்து தெரிவிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெர்சாத்து தெரிவித்துள்ளது.

என்றாலும், சம்பந்தப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!