Latestமலேசியா

செபராங் ஜெயாவில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய ஆரஞ்சு நிற மிட்சுபிஷி வாகனம் – வீடியோ வைரல்

செபராங் ஜெயா, ஜூன்-9-பினாங்கு, செபராங் ஜெயாவில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய நபரால் பொது மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

​வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆரஞ்சு Mitsubishi Triton இரக நான்கு சக்கர வாகனம், செபராங் ஜெயா சாலையில் மிகவும் ஆபத்தான முறையிலும், தாறுமாறாகவும் பின்னோக்கி இயக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

​மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க, அங்கிருந்த பொது மக்கள் சிலர் உடனடியாகச் செயல்பட்டு அந்த வாகனத்தை நோக்கிச் சென்று அதைத் தடுக்க முயன்றனர்.

​அதனைத் தொடர்ந்து வெளியான மற்றொரு வீடியோவில், பொது மக்கள் அந்த வாகனத்தை வெற்றிகரமாக வழிமறித்து நிறுத்தி, ஓட்டுநரை கீழே இறங்குமாறு உத்தரவிடுவதைக் காண முடிகிறது.

​இந்தக் காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, வலைத்தளவாசிகள் பலரும் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி வருவதோடு, இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, அந்த ஓட்டுநரின் அடையாளம் மற்றும் இந்தச் சம்பவத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

போலீஸும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!