Latestமலேசியா

ரவூப் உல்லாச விடுதியில் சோகம்: மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை நீரில் மூழ்கி பலி

குவாந்தான், ஆகஸ்ட்-9 – ​பஹாங், ரவூப், சுங்கை ரூவானில் உள்ள ஓர் உல்லாசத்தலத்தில், மீன் குளத்தில் விழுந்த தனது மகனைக் காப்பாற்ற முயன்ற தந்தை பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

​சனிக்கிழமை பிற்பகல் சுமார் 3 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 46 வயதான Mohamed Hafidz Che Din என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

​மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ரொட்டிப் பையை எடுக்க முயன்றபோது, அவரது 8 வயது மகன் எதிர்பாராதவிதமாகக் குளத்தில் விழுந்துள்ளான்.

மகனைக் காப்பாற்றுவதற்காகத் தந்தையும் குளத்தில் குதித்துள்ளார்.

​அங்கிருந்த ஊழியர் ஒருவரும், இந்தோனேசியச் சேர்ந்த மற்றொரு நபரும் இணைந்து சிறுவனைப் பத்திரமாக மீட்டுவிட்டனர்.

ஆனால், தந்தை நீரில் மூழ்கி சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகே குளத்தின் படிகள் அருகே கண்டெடுக்கப்பட்டார்.

​CPR முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

பின்னர், ரவூப் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில், அவர் மூச்சுத்திணறி நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!