
கோலாலம்பூர் , மே-11-கெந்திங் டோல் சாவடியில் நடைபெற்ற ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், சொகுசு வாகனங்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப விதிமீறல்களை அதிகாரிகள் குறிவைத்த நிலையில், 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டன.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த 66 அமலாக்க அதிகாரிகள் ஈடுபட்டு, மொத்தம் 215 வாகனங்களை சோதனை செய்தாக பஹாங் சாலை போக்குவரத்துத் துறையின் துணை இயக்குநர் சலாஹூடின் மாட் நசீர் (Salehhudin Mat Nasir)தெரிவித்தார்.
சரியான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், காலாவதியான சாலை வரி, காப்புறுதி பாதுகாப்பு இல்லாமை, பதிவு எண் பிழைகள் மற்றும் புகைப்போக்கி அமைப்பில் மாற்றம் செய்தல் ஆகியவை கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்ற இந்த நடவடிக்கையில்,மொத்தம் 102 வாகனங்களுக்கு சம்மன்கள் வழங்கப்பட்டதோடு, சம்மன் அறிவிப்புகள் வழியாக 126 சம்மன்களும் விநியோகிக்கப்பட்டன .



