
கோலாலம்பூர், செப்- 21 -ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் இம்மாதம் 24 ஆம் தேதி வரை மேக விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மாநிலங்களில் உள்ள அணைக்கட்டுகளில் நீர்மட்டத்தை உயர்த்த அவ்வாறு செய்யப்படுகிறது.
அணைக்கட்டுகளின் நீர் இருப்பை தேவையான அளவுக்கு மீண்டும் கொண்டு வந்து, தொடர் நீர் விநியோகத்தை உறுதி செய்வதே அந்நடவடிக்கையின் நோக்கம் என தேசிய பேரிடர் நிர்வாக மன்றமான NADMA தெரிவித்தது.
மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புகைமூட்டத்தை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மேக விதைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், மேக விதைப்பு முயற்சி வெற்றி பெறுவது வளிமண்டல நிலை மற்றும் பொருத்தமான மேகக் கூட்டங்களின் இருப்பைப் பொறுத்தே அமையும் என அது கூறியது.



