Latestமலேசியா

சுங்கை பீசி கஃபே மோதல்: இனவாதம், குண்டர் கும்பல் தொடர்பு இல்லை எனப் போலீஸ் அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர்-3,சுங்கை பீசி, டேசா துன் ரசாக்கில் உள்ள கஃபே ஒன்றுக்கு வெளியே நடந்த மோதலில் இனவாதம் அல்லது குண்டர் கும்பல் தொடர்பான அம்சங்கள் இல்லை எனப் போலீஸ் தெரிவித்துள்ளது.

மாறாக, ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம், வணிகப் பகுதியைக் கைப்பற்றுவது தொடர்பான தகராறு அல்லது தவறான புரிதலால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 16 முதல் 44 வயதுக்குட்பட்ட 8 ஆண்கள் மற்றும் ஒரு பெண் என மொத்தம் ஒன்பது பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் முக்கியச் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 6 பேருக்கு ஏற்கனவே குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பதிவுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மேலும் 15 பேரைப் போலீஸ் தேடி வருகிறது.

ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

எனவே, உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், சம்பவம் குறித்து யூகங்களை வெளியிட வேண்டாம் என்றும் போலீஸ் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!