Latestமலேசியா

கிள்ளான் செலாத்தான் இடைநிலைப்பள்ளி அருகே சண்டை: இரண்டாம் படிவ மாணவன் உட்பட 8 பேர் கைது

ஷா ஆலம், மே-21-கிள்ளான் செலாத்தான் (Klang Selatan) பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி அருகே ஏற்பட்ட குழு சண்டையில், இரண்டாம் படிவ மாணவன் உட்பட எட்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

26 விநாடிகள் கொண்ட சண்டை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

கிள்ளான் செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி லிம் ஜிட் ஹூவேய் (ACP Lim Jit Huey) கூறுகையில், 14 முதல் 24 வயதுக்குட்பட்ட உள்ளூர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறான புரிதல் மற்றும் கேலி காரணமாக இரு குழுக்களுக்கிடையே சண்டை ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரிக்கப்பட்டு வரும் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!