
பெட்டாலிங் ஜெயா, ஜூன்-24,
பெட்டாலிங் ஜெயா, பண்டார் சன்வேயில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், உடல் முழுக்க பலத்த காயங்களுடன் வெளிநாட்டு மாணவி ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சுமார் 11 மணியளவில் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், சம்பவ இடம் விரைந்த போலீஸார், இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த மாணவியின் உடலைக் மீட்டனர்.
உயிரிழந்த மாணவி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள ஒரு முன்னணி தனியார் உயர்கல்விக் கூடத்தில் படித்து வந்தவர் என்றும், அவர் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, அதே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு இளைஞர் ஒருவரைப் போலீஸார் உடனடியாகக் கைதுச் செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மாணவியின் உடல் சவப் பரிசோதனைக்காக மலாயா பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.



