
சென்னை, ஏப்ரல்-17-விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத் தளத்தில் கசிந்த விவகாரத்தில் அடுத்த முன்னேற்றமாக, படத்தின் காட்சிகளைத் திருடி வெளியிட்டதாக சந்தேகிக்கப்படும் 3 முக்கியக் குற்றவாளிகள் கைதாகியுள்ளனர்.
தமிழக இணையக் குற்றத் தடுப்புப் போலீஸார் அதனை உறுதிப்படுத்தினர்.
கைதானவர்களில் ஒருவர், தனியார் எடிட்டிங் ஸ்டூடியோவில் உதவி எடிட்டராக பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
அங்கிருந்து காட்சிகளைத் திருடி, பிறருக்கு அவர் பகிர்ந்துள்ளது விசாரணையில் அம்பலமானது.
இவர்களுடன் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் திரைப்படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பவும், இணையத்தில் பகிரவும் சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இதையும் மீறி சமூக வலைத்தளங்களில் படத்தைப் பகிருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தில் போலீஸாரின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கை, விஜய் இரசிகர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.



