Latestஉலகம்

டெனாலி மலையில் சிக்கிக் கொண்ட மேலும் இரு மலேசியர்கள் உதவிக்காகக் காத்திருப்பு; மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

அலாஸ்கா, மே-31, அமெரிக்கா, அலாஸ்கா நகரின் டெனாலி மலையில் மோசமான வானிலையால் சிக்கிக் கொண்ட 3 மலேசிய மலையேறிகளில் இருவர், இன்னமும் மீட்புக் குழுவினருக்காகக் காத்திருக்கின்றனர்.

ஒருவர் ஒருவழியாகக் கீழே இறங்கி வந்து helicopter-ரால் மீட்கப்பட, மீதி இருவர் 5,990 மீட்டர் உயரத்தில் தேடல் மீட்புக் குழுவினரின் உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.

அவர்களில் ஒருவருக்குக் காலில் காயம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

மூவரும் அனுபவமிக்க மலையேறிகள் ஆவர்.

2013-ல் எவரெஸ்ட் மலையேறிய Muhammad Illaham Ishak மற்றும் Zainudin Lot, தொழில்முறையிலான மலையேறி Zulkifly Yusof ஆகியோரே அவர்களாவர்.

உலகின் மிக உயரமான 7 மலைகளில் ஒன்றான டெனாலியின் சிகரத்தை வெற்றிகரமாகத் தொட்ட அம்மூவரும், மோசமான வானிலையால் இறங்கும் போது சிரமத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

இதையடுத்தே, துணைக்கோளத் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் செவ்வாயன்று அவர்கள் அவசர அழைப்பையும் சமிக்ஞையையும் அனுப்பினர்.

அவர்களில் Muhammad Illaham தனியாக ஐந்தாம் தளத்தில் உள்ள முகாமுக்கு இறங்கி வந்து, நண்பர்களை மீட்க மீட்புக்குழுவினரின் உதவியை நாடியுள்ளார்.

மேலே சிக்கிக் கொண்ட இருவரையும் நெருங்கி விட்ட மீட்புக் குழு, வானிலை ஒத்துழைத்ததும் ஹெலிகாப்டர் மூலம் வெளியே கொண்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!