
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-17-பினாங்கில் ஆடவர் ஒருவரைக் காயப்படுத்தி கொள்ளையடித்ததாகத் தாய் மற்றும் மகள் உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் இன்று குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 45 வயதுடைய தாய் Nur Fadzlin Mohamed Salim, அவரது 22 வயது மகள் Azura Abdul Latiff, மற்றும் அவர்களது ஆண் நண்பரான 41 வயது ஜி. தனன் ஜெயன் அடங்குவர்.
ஏபர்ல் 13-ஆம் தேதி பத்து ஃபிரிங்கியில் மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஆடவரை ஆயுதங்களால் தாக்கி, அவரிடமிருந்த ரொக்கப் பணம் மற்றும் கைப்பேசியைப் பறித்துச் சென்றதாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த 32 ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், பினாங்கு போலீஸார் விரைந்து செயல்பட்டு மூவரையும் கைதுச் செய்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மூவரும் தலா 4,000 ரிங்கிட் தொகை மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட வேளை, ஜூன் 3-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.



