Latestமலேசியா

இன வேறுபாடின்றி கைகொடுத்த மக்கள்”: வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு உதவிய நெகிழ்ச்சி சம்பவம்

கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தம்பதியருக்கு, இன மத பேதமின்றி பொது மக்கள் கைகொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

​பெட்டாலிங் ஜெயா, Medan Selera 223 பகுதியில், வெள்ளத்தில் சிக்கிய தனது கணவரின் காரை மீட்க முற்பட்டபோது, அங்கு கூடியிருந்த மலாய், சீனர் மற்றும் இந்தியர்கள் என அனைத்து இனத்தைச் சேர்ந்த பொது மக்களும் ஒன்றிணைந்து உதவியதாக @naqilahzul எனும் பயனர் தனது Threads பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

​வெள்ளநீர் உயர்ந்ததால் கார் அடித்துச் செல்லப்படக்கூடிய அபாயமான சூழலில், அந்நியர்கள் என பாராமல் முன்வந்து உதவிய அந்த மக்களின் செயலை அந்தப் பெண்மணி நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.

_’மலாய், சீன, இந்தியர் எனப் பாராமல் அனைவரும் உதவிக்கரம் நீட்டினர்… நாம் அனைவரும் ஒரு மலேசியா’_ என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

​கனமழையால் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் வாகனங்கள் சிக்கித் தவித்த நிலையில், இந்த ஒற்றுமை சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!