Latestமலேசியா

கூலிமில் 32 மாணவர்கள் சென்ற பஸ் கவிழ்ந்தது -ஓட்டுநர் காயம்

கூலிம், ஜூன்-24 – கூலிமில் உள்ள ஒரு தனியார் கல்லூரியைச் சேர்ந்த 32 மாணவர்கள் பயணித்த பேருந்து, இன்று Jalan Lebuh KTC சாலையில் கட்டுப்பாட்டை இழந்து
கவிழ்ந்தது.

எனினும் அந்த பேருந்தில் இருந்த அனைத்து மாணவர்களும் காயம் இன்றி உயிர் தப்பினர். இன்று காலை மணி 7.35 க்கு Taman KTC1 பகுதியிலிருந்து கூலிம் உயர் தொழிற்நுட்ப பூங்காவை நோக்கி அந்த பேருந்து பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan சம்சுல் சின்ரிங் ( Syamsul Sinring ) தெரிவித்தார்.

40 வயது மதிக்கத்தக்க ஆடவரால் ஓட்டிச் செல்லப்பட்ட அப்பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து எதிர்ப்புறப் பாதையில் நுழைந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஓட்டுநருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதால் , சிகிச்சைக்காக அவர் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.

அந்த பேருந்தில் இருந்த மாணவர்கள் அனைவரும் ஏற்பாடு செய்யப்பட்ட இதர வேன்கள் மூலம் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!