Latestஉலகம்

ஸ்பெயினில் ஹான்டா வைரஸ் பரவல்: சொகுசுக் கப்பலிலிருந்து 94 பேர் பாதுகாப்பாக வெளியேற்றம்

மாட்ரிட், ஸ்பெயின், மே-11– ஹான்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோன்டியஸ் (Hondius) சொகுசுக் கப்பலில் இருந்த 94 பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸ்பெயின் (Spain) சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

19 நாடுகளைச் சேர்ந்த அவர்கள், எட்டு சிறப்பு விமானங்கள் மூலம் கேனரி தீவுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவலின்படி, இந்த வைரஸ் தொற்றால் நெதர்லாந்தைச் சேர்ந்த முதிய தம்பதியரும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவரும் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கப்பலில் இருந்தவர்களிடம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறிகளும் பதிவாகவில்லை.

இருப்பினும், வெளியேற்றப்பட்ட பின்னர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில பணியாளர்களுடன் ஹோன்டியஸ் கப்பல் நெதர்லாந்து நகரை நோக்கி தனது பயணத்தைத் தொடரவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!