Latestமலேசியா

சுங்கை சிப்புட்டில் மாணவர்களுக்கு 20 மடிக்கணினிகள், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி; மஇகா. சேவை தொடரும் – தான் ஶ்ரீ ராமசாமி

கோலாலம்பூர், ஜூன்-28-இந்தியா செல்லத் திட்டமிடும் அனைத்துலக பயணிகள் கவனத்திற்கு…

இந்தியாவுக்கு வரும் அனைத்துப் பயணிகளுக்கும் புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

​சில நாடுகளில் பரவி வரும் Ebola மற்றும் Bundibugyo தொற்றுநோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டு, இந்த முக்கிய அறிவிப்பை மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது.

​இதன்படி, இந்தியாவுக்கு வரும் அனைத்து அனைத்துலகப் பயணிகளும் தங்களின் உடல்நலம் குறித்த ‘சுயவிவரப் பிரகடனப் படிவத்தை’ இணையத்தில் பூர்த்திச் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

​பயணிகள் தங்களின் விமானப் பயணத்திற்கு முன்னரோ, அல்லது இந்தியா வந்தடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவோ, அதிகாரப்பூர்வ ‘AIR SUVIDHA 2.0’ இணையப் பக்கத்தின் வழி இதனைச் சமர்ப்பிக்க வேண்டும்.

​விமான நிலையத்தில் எவ்விதத் தாமதமும் இன்றி விரைவாகப் குடிநுழைவுச் சோதனைகளைக் கடக்க, பூர்த்திச் செய்யப்பட்ட அந்தப் படிவத்தை அவர்கள் கையில் வைத்திருக்கவோ அல்லது தங்களின் கைப்பேசியில் காண்பிக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

​பயணிகள் இதற்கானப் பதிவுகளை airsuvidha.civilaviation.gov.in என்ற இணைய முகவரியில் மேற்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!